< Back
தேசிய செய்திகள்
ஒரே நாளில் 356 திருமணங்கள்.. குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 356 திருமணங்கள்.. குருவாயூர் கோயில் வரலாற்றில் புதிய உச்சம்

தினத்தந்தி
|
8 Sept 2024 5:32 PM IST

கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இருந்துள்ளது.

திருச்சூர்,

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுகிறது. சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து உள்ளன.

இந்த நிலையில், முகூர்த்த நாளான இன்று குருவாயூர் கோவிலில் 354 திருமணங்கள் நடைபெற்றன. குருவாயூரில் ஓரே நாளில் இவ்வளவு திருமணங்கள் நடப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டில் 227 திருமணங்கள் நடைபெற்றதே அதிகபட்சமாக இதுவரை இருந்து வந்தது.

இன்று 363 திருமணங்களுக்கு முதலில் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 9 குழுக்கள் தேவஸ்தானத்திற்கு தெரிவிக்காததால் 354 திருமணங்கள் மட்டும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்