< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
|1 May 2024 1:03 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு,
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
ஜம்மு- காஷ்மீரில் கிஷ்த்வாரில் இன்று அதிகாலை 1:33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 30 கி.மீ ஆழத்திலும், 76.57 நீளத்திலும் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதங்ககள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது பொதுவாக நிகழும் சிறிய அளவிலான நிலநடுக்கம் என்றாலும் ரிக்டர் அளவு கோலில் 6 புள்ளிகளுக்கு மேல் அதிர்வு பதிவாகும்போதுதான் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.