< Back
தேசிய செய்திகள்
3 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த ராகுல் காந்தியின் யாத்திரை... இன்று உ.பி-ல் நுழைகிறது
தேசிய செய்திகள்

3 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த ராகுல் காந்தியின் யாத்திரை... இன்று உ.பி-ல் நுழைகிறது

தினத்தந்தி
|
3 Jan 2023 3:04 AM GMT

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுமுதல் உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த யாத்திரை ஜம்மு காஷ்மீரில் முடிவடைய உள்ளது.

இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் மேற்கொள்ளாத மிக நீண்ட நடைப்பயணம் இது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடையும் யாத்திரைக்குப் பிறகு, யாத்ராவின் செய்தியைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கும்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை' ஒன்பது நாள் இடைவேளைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது. மொத்தம் 110 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த யாத்திரை இதுவரை 3,000 கி.மீ. வரை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்