< Back
ஆன்மிகம்
திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

தினத்தந்தி
|
23 Jan 2024 4:20 PM IST

டிக்கெட்டுகளை இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கத்தில் வெளியாகிறது. ttdevasthanams.ap.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்