< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருட்டு வழக்குகளில் 30 பேர் கைது- ரூ.1.32 கோடி வாகனங்கள், நகைகள் மீட்பு
|9 Aug 2022 10:56 PM IST
திருட்டு வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1.32 கோடி வாகனங்கள், நகைகள் மீட்பு
பெங்களூரு: பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-பெங்களூரு மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட சேஷாத்திரிபுரம், கப்பன்பார்க், அல்சூர் கேட், வில்சன் கார்டன், எஸ்.ஜே.பார்க், வயாலிகாவல் ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றசம்பவங்களில் தொடர்புடைய 30 பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1.32 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனங்கள், 7 கார்கள், தங்க நகைகள், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பொருட்களை போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.