< Back
தேசிய செய்திகள்
பணத்தகராறில், தொழிலாளியை தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை
தேசிய செய்திகள்

பணத்தகராறில், தொழிலாளியை தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை

தினத்தந்தி
|
14 July 2022 9:05 PM IST

பணத்தகராறில், தொழிலாளியை தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 44). இதேபோல் மத்திகை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (32). தொழிலாளி. இந்த நிலையில் மோகனுக்கும், சதீசுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி இவர்களுக்கு இடையே மீண்டும் பணத்தகராறு ஏற்பட்டு்ள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோகன், சதீஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சதீஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவமொக்கா போலீசார் மோகனை கைது செய்தனர். மேலும் அவர்மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா கோா்ட்டில் நடத்து வந்தது. நேற்றுமுன்தினம் வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பல்லவி தீர்ப்பு கூறினார். அதில் மோகனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்