< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஷ்கார்: மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி
|17 Aug 2024 11:54 AM IST
சத்தீஷ்காரில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் பருவமழைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டம் சந்தமுடா கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று மாலை வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இந்த சம்பவத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.