< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி
|29 Sept 2023 12:56 AM IST
சத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் பலோட் மாவட்டத்தில் உள்ள கிஸ்னா கிராமத்தில் மூன்று பெண்கள் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து மூன்று பெண்களும் அங்கிருந்த மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மூன்று பெண்களும் உடல் கருகினர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். உயிரிழந்தவர்கள் சமேலி நிஷாத், அவரது மருமகள் கமின் நிஷாத் மற்றும் பிசாண்டின் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.