< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழப்பு - 3 பேர் மீட்பு
|22 May 2023 3:41 PM IST
உத்தரப் பிரதேசத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
பல்லியா,
பல்லியா நகரில் உள்ள மால்தேபூர் கங்கா காட் என்ற இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மால்தேபூர் கங்கா காட் பகுதியில் இன்று காலையில் நடைபெற்ற சடங்குக்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அந்த சடங்கில் கலந்து கொள்வதற்காக சுமார் 35 பேர் படகில் ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென படகு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அப்போது பலத்த காற்றினால் படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று பெண்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படகு டிரைவர் தலைமறைவாக உள்ளதாகவும் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் தெரிவித்தார்.