< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
மேற்கு வங்கத்தில் பள்ளி வகுப்பை புறக்கணித்துவிட்டு ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் உயிரிழப்பு

29 Jun 2023 5:31 AM IST
ஆழமான பகுதிக்குச் சென்று தத்தளித்த மாணவனைக் காப்பாற்ற மேலும் 2 மாணவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் பங்குரா மாவட்டத்தில் உள்ளது துர்காபூர் கிராமம். இந்த ஊரை ஒட்டி தாமோதர் ஆறு ஓடுகிறது. ஆற்றில் ஒரு தடுப்பணையும் உள்ளது. இங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 8 மாணவர்கள் நேற்று வகுப்பை புறக்கணித்துவிட்டு, தாமோதர் ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு ஜாலியாக ஆட்டம்போட்ட அவர்களுக்கு பேராபத்து காத்திருந்தது.
அவர்களில் ஒரு மாணவன் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று தத்தளித்தான். உடனே அவனைக் காப்பாற்ற மேலும் 2 மாணவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மூழ்கி உயிரிழந்தனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மாலையில் 3 மாணவர்கள் உடல்களும் மீட்கப்பட்டன.