< Back
தேசிய செய்திகள்
காசியாபாத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
தேசிய செய்திகள்

காசியாபாத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு

தினத்தந்தி
|
3 Nov 2022 7:46 PM IST

குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள பசோண்டா பகுதியில், 3 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிசல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே, குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அந்த குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் இடிபாடுகளில் சிக்கி நாசமடைந்தன.

இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அதற்காக பள்ளம் தோண்டிய போது அருகில் இருந்த இந்த கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காசியாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்