< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்ட்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற என்கவுண்ட்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்

தினத்தந்தி
|
5 Aug 2023 9:44 AM IST

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நேற்று (ஆகஸ்ட் 4) நடந்த என்கவுண்ட்டரில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு,

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹாலன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் நடைபெற்ற சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அதன்பிறகு, என்கவுண்ட்டரில் உயிரிழந்த ராணுவ வீரர்களிடம் இருந்து 4 ஏகே-47 துப்பாக்கிகளை பயங்கரவாதி ஒருவர் பறித்துச் சென்றார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்