பிகாரில் ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி..!
|பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.
பாட்னா,
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள பாரசட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட குபேர் பிண்ட் கிராமத்தில் ராணுவத்தின் வெடிகுண்டு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின் போது வெடிகுண்டு இலக்குத் தவறி பொதுமக்கள் பகுதியில் விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கயாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை பாரசட்டி காவல் நிலைய அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி, தவறுதலால பொதுமக்கள் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என தெரிவித்தார்.