< Back
தேசிய செய்திகள்
உடுப்பியில்  திமிங்கல உமிழ்நீர் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்
தேசிய செய்திகள்

உடுப்பியில் திமிங்கல உமிழ்நீர் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

உடுப்பியில் திமிங்கல உமிழ்நீர் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

மங்களூரு-

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா எட்தரே புதிய பேருந்து நிலையம் பகுதியில் திமிங்கல உமிழ்நீர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ் நிலையத்தில் சோதனை செய்தனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது26), மில்லன் மோனிஷ் ஷெட்டி (27), பிருத்விடோமினிக் (27) என்பதும், அவர்கள் திமிங்கல உமிழ்நீர் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து 3 கிலோ திமிங்கல உமிழ்நீரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இதுகுறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்