< Back
தேசிய செய்திகள்
யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்
தேசிய செய்திகள்

யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்

தினத்தந்தி
|
29 July 2022 8:18 PM IST

மடிகேரி டவுனில் யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானை தந்தங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடகு;

போலீசார் ரோந்து பணி

குடகு மாவட்டம் மடிகேரியில் நேற்று சி.ஐ.டி. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மடிகேரி டவுனில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் சுற்றிக் கொண்டிருந்தது. போலீசாரைக் கண்ட டிரைவர் காரை வேகமாக ஓட்டினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை தங்களது மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச்சென்று மடக்கினர்.

பின்னர் காரில் இருந்த டிரைவர் மகாதேவசாமி, குரு மற்றும் ஹேமந்த் ராஜ் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காரில் ஒரு ஜோடி யானைத்தந்தங்களை வைத்திருந்ததும், அவற்றை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து மகாதேவசாமி உள்ளிட்ட 3 பேரையும் சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு ஜோடி யானைத்தந்தங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு யானை தந்தங்களை யார் கொடுத்தது, அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார், யார்?, யாரிடம் அவர்கள் யானை தந்தங்களை விற்க முயன்றனர் என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்