< Back
தேசிய செய்திகள்
மத்தியபிரதேசத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்த 3 சிறுவர்கள்
தேசிய செய்திகள்

மத்தியபிரதேசத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்த 3 சிறுவர்கள்

தினத்தந்தி
|
30 July 2023 12:39 AM IST

மத்தியபிரதேசத்தில் 15 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கற்பழித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பான நிலையில், 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

2 சிறுவர்கள் கைது

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் லசுதியா ஜெய்சிங் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 15 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கற்பழித்தனர். அதை வீடியோ படம் எடுத்த அவர்கள், சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுதொடர்பாக 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 சிறுவர்களை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மத்தியபிரதேச மாநிலம் மைகார் கோவில் நகரில், மற்றொரு 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார். அங்குள்ள ஒரு பிரபல கோவிலின் அறக்கட்டளையில் பணி புரியும் சுமார் 30 வயதுடைய 2 பேர், அந்த சிறுமியை கற்பழித்தனர். பின்னர் அவரை கொடூரமாக தாக்கினர். அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கற்பழிப்பு குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீடுகள் இடிப்பு

அவர்கள் இருவரையும் பணியில் இருந்து குறிப்பிட்ட கோவில் நிர்வாகம் நீக்கியது. மேலும் அவர்கள் இருவரது வீடுகளும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. அதையடுத்து அவர்களது 2 வீடுகளையும் நகராட்சி நிர்வாகம் நேற்று இடித்து தரைமட்டமாக்கியது.

மேலும் செய்திகள்