< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அரியானா: கழிவுநீர் குழாய் பொருத்தும் பணியின்போது ஏற்பட்ட மன்சரிவில் மூன்று பேர் உயிரிழப்பு
|23 Dec 2022 12:50 AM IST
கழிவுநீர் குழாய் பொருத்தும் பணியின்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
ஹிசார்,
பீகாரைச் சேர்ந்த மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கப்ரோ கிராமத்தில் கழிவுநீர் குழாய்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 10 அடிக்கும் கீழே இறங்கி வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதனால், மூவரும் மண்சரிவில் சிக்கி புதைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், கனரக மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் மூவரையும் வெளியே எடுத்தனர், ஆனால் அதற்குள் அவர்கள் இறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.