< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை
|26 May 2022 8:10 AM IST
காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
குப்வாரா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ஜுமாகுண்ட் கிராமத்திற்குள் பயங்கரவாதிகள் ஊருடுவ முயன்ற தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என காஷ்மீர் ஐ.ஜி. தெரிவித்து உள்ளார்.