< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் பலி
|5 Sept 2022 4:10 AM IST
பஞ்சாபில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகார்,
பஞ்சாபில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்ததாக அரசு ரெயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரி தெரிவித்தார். நேற்று லூதியானா மாவட்டத்தில் உள்ள தண்டரி கலன் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து அரசு ரெயில்வே போலீஸ் அதிகாரி ஜஸ்கரன் சிங் கூறும்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவர்கள் மீது லூதியானா-அம்பாலா பயணிகள் ரெயில் மோதியது. இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கூறினார்.