< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மிசோரத்தில் நிலச்சரிவு: 3 பேர் பலி
|12 Jun 2024 9:07 PM IST
மிசோரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
ஐஸ்வால்,
மிசோரம் மாநிலத்தின் மமித் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் கான்லங்க் கிராமத்தில் நேற்று இரவு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அக்கிராமத்தை சேர்ந்த வீடு மண்ணுக்குள் புதைந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த நிலச்சரிவில் அந்த வீட்டில் வசித்த சஞ்சிவ் சக்மா (வயது 32) அவரது மகள் கிருபா மலா (10), உறவுக்கார சிறுமி ஹன்டரி (12) ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். அவரது உடல்களை மீட்டு மீட்புக்குழுவினர் பிரேதபரிசோதனைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.