< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
|28 Dec 2022 1:15 PM IST
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் நேற்று டிரக் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். அடர்த்தியான மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த கார், கன்னோஜ், தல்கிராம் காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து டிரக் மீது மோதியது.
இந்த விபத்தில் செயல் அலுவலர் (EO), எழுத்தர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மீரட்டைச் சேர்ந்த சுதிர் குமார் (44), தனு தோமர் (30) மற்றும் கார் டிரைவர் அஸ்லம் (40) என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து பின்னால் வந்த மேலும் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதியது. ஆனால் அவர்களில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.