< Back
தேசிய செய்திகள்
மத்தியப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
16 Sept 2023 8:18 PM IST

மத்தியப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

உஜ்ஜைன்,

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 40 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.

இந்தூரில் இருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று கனமழை காரணமாக வளைவு ஒன்றில் திரும்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாவட்டத் தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள ஃபர்னாகேடி கிராமத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கச்ரோட் காவல் நிலையப் பொறுப்பாளர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் நடத்துனர் உட்பட இருவர் பேருந்தின் அடியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்