திடீரென பழுதான லிப்ட் : மூச்சு திணறலால் அலறிய 3 குழந்தைகள்
|உத்தரபிரதேசத்தில் திடீரென பழுதான லிப்ட்டுக்குள் சிக்கிய 3 குழந்தைகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது.
காஜியாபாத்,
உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கிராசிங்ஸ் ரிபப்ளிக் டவுன்ஷிப்பில் உள்ள அசோடெக் தி நெஸ்ட் எனும் அடுக்குமாடி கட்டத்தில் 8 முதல் 10 வயதுள்ள 3 பெண் குழந்தைகள் சென்றுள்ளனர்.
அப்போது திடீரன இயந்திர கோளாறு காரணமாக லிப்ட் பாதியிலே நின்றது இதனால் 3 குழந்தைகளும் அலறி துடித்துள்ளனர். பின்னர் பயத்தில் அழுதபடி லிப்ட் கதவை திறக்க முயற்சி மேற்கொண்டு பலனளிக்கவில்லை. இறுதியில் ஒரு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட மற்ற இரு குழந்தைகளும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்.
இப்படி 25 நிமிடங்காகளாக குழந்தைகள் சிக்கி தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கட்டத்தில், லிப்ட் ஏன் இவ்வளவு நேரமாக இயங்கவில்லை என பார்த்த போது தொழில்நுட்ப கோளாறால் சிக்கி உள்ளது என்பதை அறிந்து பின்னர் லிப்டை திறந்து பார்த்துள்ளனர். சிக்கியிருந்த 3 குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
லிப்ட் பராமரிப்பு சரியில்லாததால் பழுதடைந்ததாக ஹவுசிங் சொசைட்டி குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டினர். சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பராமரிப்பு நிறுவனத்தின் அலுவலக பணியாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லிப்டில் சிக்கிய சிறுமிகளில் ஒருவரின் பெற்றோரும் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். குழந்தையின் தந்தையின் புகாரின்படி, லிப்ட் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 25 லட்ச ரூபாய்க்கு மேல் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.