< Back
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் விஷ வாயு தாக்கி 3 விவசாயிகள் பலி
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் விஷ வாயு தாக்கி 3 விவசாயிகள் பலி

தினத்தந்தி
|
27 Aug 2023 2:40 AM IST

உத்தரபிரதேசத்தில் மோட்டார் பம்பை பழுது பார்க்க கிணற்றுக்குள் சென்ற 3 விவசாயிகள் விஷ வாயு தாக்கி பலியாகினர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஜடுவால் கிராமத்தை சேர்ந்த கைலாஷ் (வயது 42), ஹன்ஸ்ராஜ் (38), அனில் (30) ஆகிய 3 விவசாயிகள் நேற்று காலை வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு சென்றனர். அங்கு அவர்கள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முயன்றபோது, மோட்டார் பம்ப் பழுதாகி இருப்பதை அறிந்தனர். தொடர்ந்து மோட்டாரை பழுது பார்ப்பதற்காக 3 பேரும் கிணற்றுக்குள் இறங்கியதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது விவசாயிகள் 3 பேரும் கிணற்றுக்குள் மயங்கி கிடந்தனர். உடனடியாக அவர்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்