< Back
தேசிய செய்திகள்
கேரளா: ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

கேரளா: ஆற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தினத்தந்தி
|
11 Feb 2024 6:55 AM IST

கேரளாவில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக நேற்று மாலை வடக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குன்னமங்கலத்தில் மினி என்ற சிந்து, அவரது மகள் அதிரா மற்றும் அவர்களது உறவினரான 13 வயது சிறுவன் அத்வைத் மூவரும் ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

இந்த நிலையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, சிறுவன் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதையடுத்து சிறுவனை காப்பாற்ற முயன்ற மற்ற இருவரும் சேர்ந்து நீரில் மூழ்கினர். மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

மேலும் செய்திகள்