< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பக்தர்களுடன் சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்து.. மூவர் பலி - 14 பேர் படுகாயம்
|13 July 2024 6:58 PM IST
14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பூரி,
கர்நாடக மாநிலம் ஐதராபாத் நகரில் இருந்து பீகாரின் கயா நகருக்கு 20 பக்தர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் புடிக்மாரி சதுக்கத்திற்கு அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் என்றும், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.