< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் கார் மோதி 3 மாணவர்கள் உயிரிழப்பு
|12 May 2023 5:28 AM IST
உத்தரபிரதேசத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் தவுகி பகுதியில் நேற்று காலை சில மாணவர்கள் பள்ளி செல்வதற்காக பஸ்சுக்கு காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் உறவினர்கள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.