< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசா ரயில் விபத்து: மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை கைது செய்தது சிபிஐ
|7 July 2023 6:22 PM IST
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே மூத்த பொறியாளர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
பலாசோர்,
கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பல்வேறு கோணங்களில் ரயில்வே விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று ரயில்வே மூத்த பொறியாளர்கள் மூன்றுபேரை சிபிஐ கைது செய்துள்ளது. அருண் குமார் மஹந்தா, முகம்மது அமீர் கான், பப்பு குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.