< Back
தேசிய செய்திகள்
சொரப் அருகே  திருட்டு வழக்கில் 3 பேர் கைது
தேசிய செய்திகள்

சொரப் அருகே திருட்டு வழக்கில் 3 பேர் கைது

தினத்தந்தி
|
9 Sept 2023 12:15 AM IST

சொரப் அருகே திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஆனவட்டி அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் ஜாபர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் சொரப்பிற்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் ஜாபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்றனர்.

இதுகுறித்து ஜாபர் ஆனவட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில் பதகட்டே பகுதியை சேர்ந்த இர்ஷாத் (வயது28), சிகாரிப்புரா கவாஸ் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (24), சாகர் பகுதியை சேர்ந்த பயாஸ் (42) ஆகிய 3 பேரை ஆனவட்டி போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ஜாபர் வீட்டில் நகை திருடியதை அவர்கள் 3 பேரும் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் மீது உத்தரகன்னடா, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் 6 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ரூ.9லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நகைகள், ரூ.1½ லட்சம் ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்