< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருட்டு வழக்கில் 3 பேர் கைது
|16 Sept 2023 12:15 AM IST
மைசூருவில் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசாா் கைது செய்துள்ளனர்.
மைசூரு
மைசூரு டவுன் இலவாலா போலீசார் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் 3 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் ஊட்டஹள்ளியை சேர்ந்த காவேரப்பா, நிஷாந்த், அம்ருதேஷ் என்பதும், அவர்கள் மைசூரு-உன்சூர் சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் பல்வேறு திருட்டு சம்பவங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து இலவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.