< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சட்டவிரோதமாக ஆயுத விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது - பஞ்சாப் போலீசார் அதிரடி
|5 Sept 2022 1:00 AM IST
சட்டவிரோதமாக ஆயுத விற்பனையில் ஈடுபட்ட மூன்றுபேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப்,
சட்டவிரோதமாக ஆயுத விற்பனையில் ஈடுபட்ட மூன்றுபேரை கைது செய்த பஞ்சாப் போலீசார், அவர்களிடம் இருந்து 63 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் இருந்து சட்ட விரோதமாக பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆயுதம் விற்க செய்யப்படுவதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படிப்படையில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் கைலாஷ் சிங், சோனு சிங் மற்றும் கோரேலால் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 63 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மூன்று பேர் மீதும் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.