< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலையில் 27-ந்தேதி மண்டல பூஜை - பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு
|22 Dec 2023 6:32 AM IST
சன்னிதானத்தில் பக்தர்கள் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவனந்தபுரம்,
மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அங்கு, வரும் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நேற்றைய தினமும் சன்னிதானத்தில் பக்தர்கள் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு வரும் சிறார்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.