< Back
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்

தினத்தந்தி
|
7 Sept 2024 9:32 AM IST

நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27,189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநில அரசு இதை தொற்று நோயாக அறிவித்துள்ளது. மேலும் வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு மாநகரில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்