< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 25-ந்தேதி விடுமுறை
|21 Oct 2022 9:05 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 25-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருந்தது.
இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் (செவ்வாய் கிழமை) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.