< Back
தேசிய செய்திகள்
அசாமில் 2,500 கிலோ போதை பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

அசாமில் 2,500 கிலோ போதை பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
27 Oct 2022 11:53 AM GMT

அசாமில் 2,500 கிலோ எடை கொண்ட போதை பொருளை ஏற்றி சென்ற லாரியை போலீசார் மடக்கி பறிமுதல் செய்தனர்.



கவுகாத்தி,


அசாம் மற்றும் திரிபுரா எல்லையை ஒட்டிய பகுதியில் ஜோர்ஹாத் என்ற இடத்தில் லாரி ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் சென்றது. அதனை இணை கமிஷனர் பார்த்தா மகந்தா தலைமையிலான போலீசார் குழு மடக்கி பிடித்து சோதனையிட்டது.

அதில், சமையலுக்கு பயன்படும் இஞ்சி அடங்கிய சாக்குகளின் உள்ளே கஞ்சா வகையை சேர்ந்த போதை பொருள் மூட்டை, மூட்டையாக மறைத்து பதுக்கி வைக்கப்பட்டு கடத்தலுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரிய வந்தது.

அசாமை மைய பகுதியாக வைத்து இந்த போதை பொருட்களை நாடு முழுவதும் வினியோகிப்பதற்கான திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

அவற்றில் 2,500 கிலோ எடை கொண்ட மணிப்பூரி கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ஒரு கிலோ ரூ.60 ஆயிரம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் அரியானாவை சேர்ந்த லாரி ஓட்டுனர் அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளரான உத்தரகாண்டை சேர்ந்த ஜிதேந்திர குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்