சிறுமியை கற்பழித்து கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை
|சிறுமியை கற்பழித்து கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கதக் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு:
சிறுமியை கற்பழித்து கொல்ல முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கதக் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
சிறுமி கற்பழிப்பு
கதக் மாவட்டம் சவதத்தி தெரதகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மவுலா ஷாப், தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 5 வயது மகள் வீட்டு முன்பாக நின்று விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மவுலா ஷாப் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பாழடைந்த ஒரு வீட்டில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. சிறுமிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருந்தார். அத்துடன் கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்து விடுவதாகவும் சிறுமிக்கு மவுலா ஷாப் மிரட்டல் விடுத்திருந்தார். இதுபற்றி சவதத்தி டவுன் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மவுலா ஷாப்பை கைது செய்திருந்தார்கள்.
25 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த கற்பழிப்பு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கதக் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. போலீஸ் தரப்பில் கோர்ட்டில் மவுலா ஷாப் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை கடத்தி சென்று, மயக்க மருந்து கொடுத்து மவுலா ஷாப் பலாத்காரம் செய்து இருப்பதுடன், கொலை செய்ய முயன்றதும் நிரூபணமாகி உள்ளது. அதனால் அவருக்கு போக்சோ சட்டத்தின்படி 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளார்.