< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கொச்சி விமான நிலையத்தில் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் - கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் கைது
|13 May 2024 9:04 AM IST
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கொச்சி,
கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான இரண்டரை கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அவர், தனது ஜீன்ஸ் பேண்டிற்குள், பிரத்யேகமாக பாக்கெட் அமைத்து அதைப் பயன்படுத்தி தங்கத்தை கடத்த முயன்றது தெரிய வந்தது.
அவரிடமிருந்து 2.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி என்று கூறப்படுகிறது. கடத்தலில் ஈடுபட்டது கன்னியாகுமரியைச் சேர்ந்த காதர் மொய்தீன் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து காதர் மொய்தீனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.