< Back
தேசிய செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 232 வழக்குகள் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான 232 வழக்குகள் - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

தினத்தந்தி
|
31 Oct 2022 1:49 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள 232 பொதுநல வழக்குகள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த குடியுரிமை திருத்த சட்டம், சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாகக் கூறி போராட்டங்கள் நடந்தன. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் 232 பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. தீபாவளி பண்டிகை விடுமுறைக்குப் பின், சுப்ரீம் கோர்ட் இன்று முதல் செயல்பட உள்ளது. முதல் நாளிலேயே, இந்த அமர்வில் 240-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்