< Back
தேசிய செய்திகள்
கேரளாவில், லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து - நாமக்கல் மாணவர்கள் 23 பேர் காயம்
தேசிய செய்திகள்

கேரளாவில், லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து - நாமக்கல் மாணவர்கள் 23 பேர் காயம்

தினத்தந்தி
|
25 May 2023 12:37 PM IST

கேரள மாநிலத்தில் சுற்றுலாவிற்கு சென்ற போது விபத்தில் சிக்கி நாமக்கல் பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர்கள் காயம் அடைந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், திரிச்சூர் மாவட்டத்தில் , பாலக்காடு எர்னாவரம் நெடுஞ்சாலையில் உள்ள, சுங்கச்சாவடி அருகே லாரி ஒன்று பழுதாகி நின்றது. நள்ளிரவு முதல் லாரி சாலையில் பழுதாகி நின்ற நிலையில்,அவ்வழியாக வந்த சுற்றுலா பேருந்து அதிகாலை 4 மணி அளவில் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில், பேருந்தில் பயணித்த நாமக்கல் ஐடிஐ மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு காரணம் ஓட்டுனர் தூங்கியதாலும் , அதி வேகமாக வந்ததுமே காரணம் என கூறப்படுகிறது. பேருந்தின் ஓட்டுனர் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் கடும் முயற்சிக்கு பிறகு ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் படுகாயமடைந்த 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் , 18 பேர் திரிச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர். மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என போலிசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்