< Back
ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

தினத்தந்தி
|
8 Nov 2023 7:17 PM IST

இலவச தரிசனம் மூலம் 10 நாட்களில் 4.25 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் இந்த மாதம் 10-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு 22,500 என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசனம் மூலம் நாளொன்றுக்கு 42,500 பேர் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களில் 4 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்