< Back
தேசிய செய்திகள்
பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 2.25 லட்சம் சிம்கார்டுகள் இணைப்பு துண்டிப்பு
தேசிய செய்திகள்

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 2.25 லட்சம் சிம்கார்டுகள் இணைப்பு துண்டிப்பு

தினத்தந்தி
|
11 May 2023 6:59 AM IST

பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 2.25 லட்சம் சிம்கார்டுகள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

பாட்னா,

பீகார் தொலைத் தொடர்புத்துறை பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.25 லட்சத்துக்கும் அதிகமான சிம்கார்டுகளின் தொடர்பை துண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டதால் அந்த சிம்கார்டுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.

517 இடங்களில் விதிகளுக்கு மாறான வகையில் சிம்கார்டுகள் வினியோகம் நடைபெற்றதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் கண்டறிந்து உள்ளதுடன், அவற்றை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்