< Back
தேசிய செய்திகள்
கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் - மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் - மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
10 Feb 2023 12:22 AM IST

கடந்த ஆண்டில் 2.25 லட்சம் பேர் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களில் 2011-க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 2,25,620 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து சென்ற இவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர் என்று கூறிய அவர், அந்த நாடுகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 5 இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்