< Back
தேசிய செய்திகள்
பிரிவினையின்போது 2.2 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்கள் பாகிஸ்தானிடம் சென்றன: அஜித் தோவல்
தேசிய செய்திகள்

பிரிவினையின்போது 2.2 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்கள் பாகிஸ்தானிடம் சென்றன: அஜித் தோவல்

தினத்தந்தி
|
16 Feb 2023 10:20 AM GMT

உத்தரகாண்டில் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.


டேராடூன்,


உத்தரகாண்டில் பந்த்நகரில் உள்ள ஜி.பி. பந்த் வேளாண்மை மற்றும் தொழில் நுட்ப பல்கலை கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

அவருக்கு இலக்கியத்திற்கான (டி.லிட்) கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை மாநில கவர்னர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் (ஓய்வு) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அஜித் தோவல், பிரிவினையின்போது 2.2 கோடி ஹெக்டேர் வேளாண் நிலங்கள் பாகிஸ்தானிடம் சென்றன. அதனால், 35 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தனது மக்களுக்கு உணவளிக்க முடியாது என பலர் நினைத்தனர்.

நம்முடைய மக்கள் தொகை தற்போது 135 கோடியாக உள்ளது. உணவு தானிய உற்பத்தி 315 மில்லியன் டன்களுக்கு உயர்ந்து உள்ளது. நாம், நமக்கு உணவளிப்பது மட்டுமின்றி உணவு தானியங்களை ஏற்றுமதியும் செய்கிறோம் என பேசியுள்ளார்.


மேலும் செய்திகள்