< Back
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.. பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கிறது பா.ஜ.க.
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை.. பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கிறது பா.ஜ.க.

தினத்தந்தி
|
26 Feb 2024 4:50 PM IST

பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பும் பிரசார வேன்களை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தேர்தலில் முக்கிய அம்சமாக கருதப்படும் தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் பா.ஜ.க. ஆலோசனைகளை கேட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகள் அடங்கிய வீடியோவை ஒளிபரப்பும் பிரசார வேன்களை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நட்டா, நாட்டின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி செய்த பணிகள் மற்றும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இந்த வீடியோ வேன்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், அதற்கான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்