< Back
தேசிய செய்திகள்
2021 நிதி ஆயோக் புத்தாக்க குறியீடு பட்டியல் - தமிழ்நாடு 5-வது இடம்..!
தேசிய செய்திகள்

2021 நிதி ஆயோக் புத்தாக்க குறியீடு பட்டியல் - தமிழ்நாடு 5-வது இடம்..!

தினத்தந்தி
|
24 July 2022 12:45 AM IST

2021 நிதி ஆயோக் புத்தாக்க குறியீடு பட்டியலில் கர்நாடக மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வகை செய்வதன் அடிப்படையில் புத்தாக்க குறியீடு பட்டியலை நிதி ஆயோக் ஆண்டுதோறும் உருவாக்கி வெளியிட்டு வருகிறது. 17 பெரிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் 18.01 புள்ளிகளுடன்முதலிடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. 17.66 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தெலங்கானாவும், 16.35 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் அரியானாவும் உள்ளன.

16.06 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் மராட்டிய மாநிலமும், 15.69 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. 15-ம் இடத்தில் பீகாரும், 16-ம் இடத்தில் ஒடிசாவும், 17-வது இடத்தில் சத்தீஸ்கரும் உள்ளன. 10 சிறிய மாநிலங்களில் பட்டியலில் 19.37 புள்ளிகளுடன் மணிப்பூர் முதலிடத்திலும் 17.67 புள்ளிகளுடன் உத்தரகாண்ட் இரண்டாமிடத்திலும் உள்ளன.

யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் 27.88 புள்ளிகளுடன் சண்டிகர் முதலிடத்திலும் 27 புள்ளிகளுடன் டெல்லி இரண்டாமிடத்திலும் உள்ளன. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் புத்தாக்க குறியீடு எண் குறைவாக உள்ளதாக கூறும் நிதி ஆயோக், இதை ஈடுகட்ட உள்நாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டுமென்று கூறியுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சிகளுக்கு வெறும் 0.7 சதவீதம் மட்டுமே தற்போது செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்