< Back
தேசிய செய்திகள்
நாடு முழுவதும் 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் யோகா பயிற்சி
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் யோகா பயிற்சி

தினத்தந்தி
|
22 Jun 2023 1:39 AM IST

நாடு முழுவதும் 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினத்தையொட்டி, நாடு முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளில் சுமார் 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தேசிய அறிவுசார் குறைபாடுடையோர் நிலையத்தில் மட்டும் 3 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று யோகா செய்தனர்.

மேலும் செய்திகள்