< Back
தேசிய செய்திகள்
ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தேசிய செய்திகள்

ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

தினத்தந்தி
|
1 Jun 2023 12:20 AM IST

ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அஸ்வினிகுமார் உபாத்யாய் ரிட் மனு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பில் எவ்வித பிழையும், தன்னிச்சையும் இல்லை. மேலும் கருப்பு பணத்தையும், பண மோசடியையும், ஊழலையும் ஊக்குவிப்பதாகவும் இல்லை என்றும், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் தெரிவித்து, ரிட் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 29-ந் தேதி தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் அஸ்வினிகுமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்