சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை; கோலாா் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
|சிறுமியை பலாத்காரம் ெசய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோலார் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கோலார் தங்கவயல்:
சிறுமி பலாத்காரம்
கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 24). இவரது பக்கத்து வீட்டில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16-ந்தேதி சிறுமி அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த நாகேந்திரா, சிறுமியை வாயை பொத்தி மறைவான பகுதிக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மேலும் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். ஆனாலும் அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
20 ஆண்டு சிறை
பின்னர் இதுபற்றி பங்காருபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நாகேந்திராவை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு கோலார் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி தேவமானே தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, நாகேந்திரா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.