< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உறவினரின் காருக்கு தீ வைத்தில் 20 கார்கள் எரிந்து நாசம்: இளைஞர் கைது
|28 Dec 2022 5:01 AM IST
டெல்லியில் பழிவாங்கும் நோக்கில் வாலிபர் ஒருவர், தன் உறவினரின் காருக்கு தீ வைத்தார்.
புதுடெல்லி,
டெல்லி சுபாஷ்நகரில் உள்ள ஒரு தனியார் கார் நிறுத்தத்துக்கு நள்ளிரவு சென்ற ஒரு வாலிபர் அங்கு நின்ற ஒரு காருக்கு தீ வைத்தார். அந்த தீ அந்த காரோடு நின்றுவிடவில்லை. மளமளவென அருகில் இருந்த கார்களுக்கும் பரவியது. இதில் 20 கார்கள் எரிந்து நாசமாயின.
இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாலிபரை பிடித்தனர். விசாரணையில் தன் உறவினரை பழிவாங்க அவரது காருக்கு தீ வைத்ததாக வாலிபர் கூறினார்.
இந்த பழிவாங்கல் விளையாட்டு, பெரிய வினையாகும் என அவருக்கு தெரியவில்லை. அவரை போலீசார் கைது செய்து 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.