< Back
தேசிய செய்திகள்
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமி - மீட்கும் பணி தீவிரம்

கோப்புப்படம்


தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமி - மீட்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
7 Jun 2023 8:46 AM IST

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேஹூர்,

மத்திய பிரதேச மாநிலம் சேஹூர் அருகே மூங்வாலி கிராமத்தில் வீட்டின் அருகே 2 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 30 அடியில் இருப்பதாகவும், சிறுமியை பத்திரமாக மீட்பதற்கான மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்